Mayu / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கிளிநொச்சி தெற்கு வலய பாடசாலைகளின் மாணவர் பிரகாசித்துள்ளனர்.
தரம் மூன்று பெண்கள் அணியில் முதலாமிடத்தை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய
பாடசாலையும், ஆண் அணியில் இரண்டாமிடத்தை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய
அணியும், கலவன் பிரிவில் முதலாமிடத்தை கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயமும்
பெற்றன.

தரம் நான்கு பெண்கள், ஆண்கள் அணியில் முதலாமிடத்தை கிளிநொச்சி மத்திய ஆரம்ப
வித்தியாலயம் பெற்றுக் கொண்டது. கலவன் பிரிவில் இரண்டாமிடத்தை கிளிநொச்சி
பரமன்கிராய் அமெரிக்கன் தமிழ்க் கலவன் பாடசாலை பெற்றது.
தரம் ஐந்து பெண்கள் அணியில் முதலாமிடத்தை கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப
வித்தியாலயமும் ஆண்கள் அணியில் இரண்டாமிடத்தை கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப
வித்தியாலயமும் பெற்றன. கலவன் பிரிவில் முதலாமிடத்தை கிளிநொச்சி கரியாலை
நாகபடுவான் இல. 3 அமெரிக்கன் தமிழ்க் கலவன் பாடசாலை பெற்றது.
ஒன்பது அணிகள் பங்குகொண்ட இப்போட்டியில் ஆறு அணிகள் தங்க விருதையும் மூன்று
அணிகள் வெள்ளி விருதையும் பெற்றன. வட மாகாண செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில்
முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்ற வலயமாக கிளிநொச்சி தெற்கு வலயம் உள்ளது.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025