Editorial / 2019 மே 21 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான பெண்களுக்கான குண்டு போடுதலில், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஜீ. சர்மிளா முதலாமிடம் பெற்றார்.
யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த போட்டியில் 8.89 மீற்றர் தூரம் எறிந்து ஜீ. சர்மிளா முதலிடம் பெற்றார்.
இப்போட்டியில் இரண்டாமிடத்தை, 8.67 மீற்றர் தூரம் எறிந்து யாழ். பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஜெ. சுகனியாவும், மூன்றாமிடத்தை 8.05 மீற்றர் தூரம் எறிந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கு. யதுசாவும் பெற்றனர்.
18 minute ago
31 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
35 minute ago