Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூலை 11 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023 அரச சேவை கெரம் சுற்றுப்போட்டியில் A மற்றும் C பிரிவுகளில் சம்பியன் கிண்ணத்தைப் பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக் கழகம் அண்மையில் வெற்றிகொண்டது.
A பிரிவின் இறுதிப்போட்டியில் கொழுப்பு பல்கலைக்கழ அணியையும், C பிரிவின் இறுதிப்போட்டியில் மொறட்டுவை பல்கலைக்கழக அணியையும் தோற்கடித்து பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக் கழகத்தினால் கிண்ணம் வெற்றிகொள்ளப்பட்டது.
இதில், பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி A பிரிவின் போட்டியில் சுஜீவ லசந்த (தலைவர்), ரசிக ராஜபக்ஷ, கயான் பெரேரா, பிரியந்த தர்மசேன மற்றும் சஞ்சய பர்னாந்து மற்றும் C பிரிவின் போட்டியில் தரிந்து பெரேரா (தலைவர்), பவந்த ஷாமிக, பிரதீப் புஷ்பகுமார, ஆர்.எம். ரத்நாயக்க மற்றும் சதுக்ஷ மதுசங்க ஆகியோர் பங்குபற்றினர்.
சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்ட பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக்கழகத்துக்குப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பணியாளர்களால் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago