2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சம்பியனானது சம்மாந்துறை விளையாட்டுக் கழகம்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 26 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

"வ்ரவேரியன் வோர் -19" இருபதுக்கு - 20 கடினபந்து கிரிக்கெட் தொடரில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய பொதுவிளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற சாய்ந்தமருது வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பீமா விளையாட்டுக் கழகத்தை வென்றே சம்மாந்துறை சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சம்மாந்துறை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், எஸ்.எம். அப்ஹாம் 33 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஆர்.எம். ரப்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு, 135 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பீமா 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களையே பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜே.எம். ரிழ்வான் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

இப்போட்டியின் நாயகனாக அப்ஹாம் தெரிவானதுடன், தொடரின் நாயகனாக நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழக வீரர் நிக்ஸி அஹமட் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .