Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
6வது தோப்பூர் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் செல்வநகர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று தோப்பூர் கிண்ண சம்பியன் மகுடத்தை சூடிக் கொண்டது.
நேற்றுமாலை, ஞாயிற்றுக்கிழமை(03) தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் செல்வநகர் - ஈஸ்ட்லங்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தியதில் செல்வநகர் அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்து.
தோப்பூர் கிண்ண கிரிக்கெட் தொடரானது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறுவதோடு இப்போட்டித் தொடரானது ஆறாவது போட்டித் தொடர் என்போதோடு போட்டியில் தோப்பூரில் உள்ள 20 கடினபந்து அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக 16 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்று அரைச் சதத்தை கடந்த செல்வநகர் அணியின் வீரர் எஸ்டி.றியாஸ் தெரிவாகியிருந்தார்.
தோப்பூர் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட செல்வநகர் விளையாட்டு கழகத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்று ஈஸ்ட் லங்கா விளையாட்டு கழகத்திற்கு ஒரு லட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விருதி போட்டியின் முதன்மை விருந்தினராக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் கலந்து கொண்டதோடு வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
தீஷான் அஹமட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago