Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி. கேதீஸ்
மத்திய மாகாண 16 வயதுக்குட்ப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் சம்பியனானது.
றிகலகஸ்கட பொரமடுல்ல தேசிய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைப்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாரதி தமிழ் வித்தியால பாடசாலையை வென்றே லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் சம்பியனானது.
இதையடுத்து லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்டப் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பாடசாலையின் கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் வே. கேதீஸ் ஆசிரியரின் முயற்சியாலும் வழிகாட்டலினாலும் இந்த வெற்றியை பெறக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
21 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
27 minute ago
2 hours ago