2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்பியனான கல்முனை லெஜன்ட்ஸ் வி.க

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 26 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம், தனது 36ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக அமரத்துவமடைந்த சீனித்தம்பி பேரின்பம் ஞாபகார்த்த இருபதுக்கு – 10 கிரிக்கெட் கடினப்பந்து தொடரில் கல்முனை லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

விபுலானந்தா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியே லெஜென்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

சம்பியனான லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு ரூபாய் 30,000 மற்றும் பெறுமதி மிக்க வெற்றிக் கிண்ணமும், இரண்டாமிடம் பெற்ற சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு ரூபாய் 20,000 மற்றும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .