Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 17 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
ஒலுவில் நைட் றைடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் எட்டாவது வருட நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக, ஒலுவில் லெவிண் ஸ்டார் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலய மைதானத்தில், மிகச் சிறப்பாக நடைபெற்ற, இறுதிப் போட்டியில், லெவிண் ஸ்டார் அணியும் லோயல் அணியும் மோதின.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய லோயல் அணியினர், எட்டு ஓவர்கள் முடிவில், ஏழு வி்க்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் இம்றாஸ் கான் 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 74 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய, லெவிண் ஸ்டார் அணியினர், 5.4 ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தனர். இதில், சிபான் 26, றஸ்மி 28 ஓட்டங்களைப் பெற்றனர்.
இத்தொடரின் சம்பியன் அணிக்கு, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவமும், இரண்டாமிடத்தைப் பெற்ற அணிக்கு, அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றஸீனும், கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
தொடரின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்ட இம்றாஸ் கானுக்கு, நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் அதிபருமான எம்.ஐ.எம்.றியாஸூம் இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கு கிழக்கு முதலமைச்சரின் இணைப்பாளர் அன்வர் நௌசாத்தும், கிண்ணங்களை வழங்கினர்.
11 minute ago
16 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
31 minute ago
39 minute ago