2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தேத்தாப்பளை பாடசாலை மாணவர் பிரகாசிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 10 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

வென்னப்புவ நகரில் அண்மையில் (03,04) நடைபெற்ற பாடசாலை மாணவருக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேத்தாப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர் பல்வேறு போட்டிகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பாடசாலை அதிபர் அருட் சகோதரி மேரி டெல்சியா அவர்களின் வழிகாட்டலில் விளையாட்டு பொறுப்பாசிரியர் பாயிஸின் சிறந்த பயிற்றுவித்தலில் மாணவர்கள் இந்த அடைவைப் பெற்றுள்ளனர்.

போட்டிகளில் பிரகாசித்த மாணவர்:

என்.ஏ. பிரதீஷ் - 13 வயதின் கீழ்

உயரம் பாய்தல் மூன்றாமிடம். 

ஏ.ஆர்.எம்.பிரமோதி - 15 வயதின் கீழ்

பரிதி வட்டம் வீசுதல் இரண்டாமிடம்,

குண்டு போடுதல் -  மூன்றாமிடம் 

ஏ. லிஹாரா - 13 வயதின் கீழ்

உயரம் பாய்தல் - மூன்றாமிடம் 

டபிள்யூ.டி.எஸ். தனிஷா - 15 வயதின் கீழ்

உயரம் பாய்தல்  இரண்டாமிடம்

எஸ்.ஜே. செனூரி தேவ்மினி - 18 வயதின் கீழ்

ஈட்டி எறிதல் மூன்றாமிடம் 

டி.எஸ். தருஷா லக்ஷிதன் - 11 வயதின் கீழ் 

உயரம் பாய்தல் மூன்றாமிடம் 

சீ.கே.எம். சதுர்த்தனா - 15 வயதின் கீழ்

உயரம் பாய்தல் - மூன்றாமிடம் 

எல். லுக்னி சுஜீவனி - 13 வயதின் கீழ்

நீளம் பாய்தல் மூன்றாமிடம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X