Janu / 2023 ஜூலை 16 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகத்திற்கும் புளூமெளன்டன் விளையாட்டுக் கழகத்திற்குமிடையிலான 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ கிறிக்கட் போட்டியில் எமரெல்ட் அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எமரெல்ட் விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புளூமெளன்டன் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
எமரெல்ட் அணியின் சார்பில் றமீஸ் 59 ஓட்டங்களையும், அணித்தலைவர் சிஜாம் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் பெற்றனர் .பாஹிம் முதலாவது ஓவரில் எந்தவிதமான ஓட்டங்களையும் கொடுக்காமல் 3 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அஸ்ஹர் இப்றாஹிம்

2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026