Kogilavani / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும்; உடற்கல்வி அலகும் இணைந்து நடத்தும் யாழ். மாவட்ட அழைக்கப்பட்ட கழகங்களின் இருபாலாருக்குமான கரம் சுற்றுப்போட்டி 3 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் பல்கலைக்கழக உடற்கல்வி அலகு உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
முதல் நாள் போட்டிகள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இறுதிப்போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு இடம்பெறும்.
இச்சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபை செயலாளரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கரம் பெண்கள் அணியின் தலைவருமாகிய திருமதி.ஜெயந்தா சோமராஜ்; கலந்துகொள்ள உள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி, கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, மானிப்பாய் விளையாட்டுக்கழக அணி ஒரு பிரிவாகவும், சென்.ஜோன்ஸ், ஸ்ரீகாமாட்சி, சென்.பற்றிக்ஸ் அணிகள் ஒரு பிரிவாகவும் போட்டிகளில் பங்குபற்றவுள்ளன. போட்டிகள் லீக் முறையில் நடைபெற்று, அரையிறுதி இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025