2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

வட மாகாண வூசூ போட்டிகள் நடத்தாமையால் அதிருப்தி

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 02 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்

வடக்கு மாகாண வூசூ போட்டிகள் நடத்தாமை திட்டமிட்ட பக்கச்சார்பான நடவடிக்கை என பாதிக்கப்பட்ட   வடக்கு மாகாண வூசூ வீரர்கள் மற்றும் மாவட்ட வூசூ சங்கத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்

வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்ககிடையே விளையாட்டு வீரர்களின் திறனை அதிகரித்தல், அனைத்து விளையாட்டிலும் சமனான விளையாடும் வீரரின் உரிமையை பேணுதல் , தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளுதல் மற்றும் வெற்றிபெறுதல், இலக்கு நோக்கி நகர்தல் என்ற  நோக்குடன் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் வருடம் தோறும் அணைத்து குழு மற்றும் தனி நபர் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன 

அந்தவகையில்  வட மாகாண அனைத்து விளையாட்டுகளும் இவ்வாண்டு முடிவுறும் நிலையில் வூசூ விளையாட்டு நடத்தப்படவில்லை

வடமாகாண வீரர் கடந்த காலங்களில் மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக தேசிய பதக்கங்களை பெற்றும் இறுதியாண்டு  வெண்கலப் பதக்கங்களையும் பெற்ற நிலையில் இவ்வருடம்  இலகுவாக வட மாகாணத்திற்க்கு தேசிய பதக்கங்களை பெற்றுக் கொள்ளும்  நிலை காணப்படுகிறது

இவ்வாறான பின்னணியில் வூசூ தேசிய போட்டியானது  நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில்  வூசூ   வடமாகாண போட்டியை இற்றைவரை வட மாகாணத்தில் நடத்தாமல் அசண்டையீனமாக உள்ளனர்

இதனால்  வீரர்களின் விளையாடும் உரிமையை மறுப்பது தேசிய போட்டிக்கு பங்குபற்ற  தகுதியாக வீரரை இனங்காண முயலாதது, அவர்களுக்கான  தேசிய போட்டிக்கான பயிற்சி வழங்காதது , மாகாண போட்டிகளை நடந்தி மகாண மட்டத்திலான சான்றிதழ்களைப் பெறுவதன் மூலம் மாணவர்களின் கல்வி பல்கலைகழக வாய்ப்பு வேலைவாய்ப்புக்காக தகைமையை ஏற்படுத்த என விளையாட்டுத்துறை வளர்ச்சி செயற்பாட்டானது உள்ளமை தொடர்பில் வட மாகாண வூசூ விளையாட்டு வீரர்களுக்கும் மாவட்டங்களின்  வூசூ சங்கத்தினரும் பொரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்த விடயம் தொடர்பில் வடமாகாண விளையாட்டு துறை அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியபோது குறித்த போட்டியை நடத்துமாறு பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் போட்டி நடைபெறும் எனவும் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X