Shanmugan Murugavel / 2016 ஜூன் 26 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாக நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் வதிரி மனோகரா விளையாட்டுக் கழகத்துக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். மேரிஸ், முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக, மதிவதனன், அமிட்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

போட்டியின் நாயகனாகத் தெரிவான அமிட்டனுக்கான பதக்கத்தினை, பருத்தித்துறை மத்தியஸ்தர் சங்கத்தின் கமல் அணிவித்திருந்ததோடு, பணப்பரிசினை கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் பா.ரவீந்திரன் வழங்கி வைத்திருந்தார்.

5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026