2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வென்ற வெகுஜன ஊடக கிரிக்கெட் அணி

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 26 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

2022 பொதுச் சேவை கிரிக்கெட் போட்டிக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக்கு முந்திய 40 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியானது பாதுக்க பொரேகெதர மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

மஞ்சுள சூரியா தலைமையிலான ஊடக அமைச்சின் கிரிக்கெட் அணி நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தொழிலாளர் துறை கிரிக்கெட் அணி 32 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 148 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வெகுஜன ஊடக கிரிக்கெட் அணி 18 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X