Mayu / 2023 டிசெம்பர் 22 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டியில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி மாணவர்களால் வெற்றி பதக்கங்களை வென்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப் பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு தெரிவான கொழும்பு சாஹிராக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகள் திங்கட்கிழமை (11) திகதி கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கில் போட்டி இடம் பெற்றது.
இப்போட்டியில் நான்குக்கு ஐந்து என்ற தண்டனை உதை மூலம் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
இதன் போது அதிகாரிகளினால் மாணவர்களுக்கான நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எம் எஸ் எம் நூர்தீன்


3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago