2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 நவம்பர் 15 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா

 
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில், நாளைய இளம் தலைவர்கள் கௌரவிப்பும் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் இளைஞர் கழகங்கள் என்பவற்றுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேவை கட்டட மண்டபத்தில் நேற்று (14) வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.
 
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்;தினதும் விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தினதும் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜஹான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.நஜீம், சாய்ந்தருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஏ.ஏ.அஸ்வத் அலி, விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம்.ரஜாய் மற்றும் விளையாட்டுக் கழங்களினதும், இளைஞர் கழகங்களினதும் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்;.
 
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஆறு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் 22 இளைஞர்கள் கழகங்கள் என்பவற்றிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 32 நாளைய இளம் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் கௌரவிக்கப்பட்டனர்.
 
இதன்போது எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோரது சேவைகளைப் பாராட்டி சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் என்பன இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .