2025 ஜூலை 09, புதன்கிழமை

வடமாகாண கால்பந்தாட்ட நிலைமைகள் தொடர்பில் அலசல்

George   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ, வடமாகாண கால்பந்தாட்ட லீக்குகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, வடமாகாண கால்பந்தாட்ட நிலைமைகள் தொடர்;பில் ஆராய்ந்தார்.

யாழ். அரியாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்ப்பந்தாட்ட பொது மைதான அரங்கில், ஞாயிற்றுக்கிழமை (16) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, 2015 ஆம் ஆண்டில் கால்பந்தாட்டம் தொடர்பில் நடைமுறைப்படுத்தவுள்ள மற்றும் செயற்படுத்தவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் தலைவர் ஆராய்ந்தார்.

மேலும், கழகங்களின் செயற்பாடுகள், கால்பந்தாட்ட போட்டிகளின் போது கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் இதன்போது கூறினார்.

அனைத்து கழகங்களும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்டு இருத்தல் கட்டாயமாகும் என்பதுடன் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் வீரர்கள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அடையாள அட்டைகளை பெற்றிருக்கவேண்டும்.

அடையாள அட்டைகள் இல்லாத வீரர்கள் லீக்குகளால் நடத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இனிவருங்காலங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதை கால்பந்தாட்ட தலைவர் வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வலிகாமம், பருத்தித்துறை லீக்குகளின் பிரதிநிதிகள் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .