2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மைலோ கிண்ணம் சென்.மேரிஷ் வசம்

George   / 2014 நவம்பர் 25 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ். மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட கால்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் நடத்திய மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி சம்பியனாகியது.

மைலோ கிண்ண சுற்றுப்போட்டிகள் கடந்த இரண்டு வார காலமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வந்தன.

சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (23) அதே மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணியை எதிர்த்து வடமராட்சி நவிண்டில் கலைமதி அணி மோதியது.

ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் சென்.மேரிஷ் அணியினர் முதல் கோலை போட்டனர். அணியின் அருள்ராசா யூட் முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தார். முதல் பாதியாட்டம் அந்த ஒரு கோலுடன் முடிவுற்றது.

இரண்டாவது பாதியாட்டத்தில் கலைமதி அணியின் ஆதிக்கம் வலுப்பெற, அந்த அணியும் ஒரு கோலை போட்டது.

எனினும்,போட்டி முடிவடைய 5 நிமிடங்கள் இருக்க, சென்.மேரிஷ் அணி, தமது இரண்டாவது கோலை போட்டது. இரண்டாவது கோலை அவ்வணியின் ஹிஸ்தோப்பர் ஜக்ஷன் பெற்றுக்கொடுத்தார்.

இறுதியில் சென்.மேரிஷ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்டநாயகன், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் சிறந்த கோல் காப்பாளர் விருதுகளை சென்.மேரிஷ் அணியின் முறையே அன்ரனி அன்ரன் சாள்ஸ், அருள்ராசா யூட் மற்றும் காணிக்கைதாஸ் சுதாகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .