2025 ஜூலை 09, புதன்கிழமை

விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 நவம்பர் 29 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை நியூஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 32வருட பூர்த்தி விழாவும் விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை(29) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூக சேவை அதிகாரி எஸ்.எம்.அமீன், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜுதீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கழகத்தின் கடந்த காலவரலாறுகள், சாதனைகள். எதிர் நோக்கிய சவால்கள் பற்றி தலைவர் உரை நிகழ்த்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவின் 125,000 ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

விளையாட்டு உத்தியோகத்தரின் சேவையைப் பாராட்டி கழகத்தால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .