Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒற்றுமை என்பது விளையாட்டுக்களின் மையக்கருவாக உருவாக்கப்படவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை விளையாட்டு கழகம் நடத்திய அணிக்கு 9 பேர் மற்றும் 7 ஓவர்களைக் கொண்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(21) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
கிடைக்கப்பெறுகின்ற வெற்றி தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வதை எதிர்கால வழ்க்கையின் அடித்தளமாக அமைத்து கொள்ள வேண்டும் என்பதே அனைத்து இளைஞர்களதும் உழைப்பாக இருக்கவேண்டும்.
சமூக ஒற்றுமையை நாங்கள் உருவாக்குவோமானால் எமது இனத்தினது உரிமைகளையும் தேவைகளையும் இலகுவாக வென்றெடுத்துக்கொள்ள முடியும் என்றார்.
30 கழகங்கள் பங்குபற்றிய இந்த சுற்றுப்போட்டியில் சுழிபுரம் விக்டோறியன்ஸ் விளையாட்டுக்கழக அணியும் உடுவில் ஸ்டார் போய்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன. இதில் விக்டோறியன்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
8 hours ago
8 hours ago