Gavitha / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு காக்காச்சிவட்டை விஷ்ணு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறாய்வு போட்டி செவ்வாய்க்கிழமை (24) மாலை வித்தியாலய மைதானத்தில் அதிபர் எஸ்.தம்பிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மகாண சபை உறுப்பினர்களான கோ.கருனாகரம், மா.நடராசா, மற்றும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் உட்பட கல்வி அதிகாரிகள், கிராம பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் வள்ளுவர் இல்லம் 364 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் இளங்கோ இல்லம் 345 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் கம்பர் இல்லம் 337 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடையங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


7 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago
32 minute ago