Kogilavani / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
எல்லே போட்டியில் அல்-அறபா விளையாட்டுக்கழகம் பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மாற்றுக்கழக வீரர் ஒருவர் அந்தக் கழகத்தில் விளையாடியிருப்பதால் விசாரணை நடத்தி சரியான தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியும் பாலமுனை ரைஸ்டார் விளையாட்டுக்கழகம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு நேற்று(7) முறைப்பாடு செய்துள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுப் போட்டியின் முதற்கட்ட போட்டியின் ஒரு அங்கமான எல்லே சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை(5) பாலமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அல்-அறபா வியையாட்டுக் கழகமும் ரைஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதிகொண்டன.
இப்போட்டியில், அல்-அறபா விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரைஸ்டார் கழகம் முறைப்பாடு செய்துள்ளனர். அல்-அறபா விளையாட்டுக் கழகத்துக்கு விளையாடிய வீரர் ஒருவர் மாற்றுக்கழகமொன்றில் அங்கத்தவராக இருப்பதாகவும் அவ்வாறான நிலையில் அறபா விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடியது சட்டதிட்டங்களுக்கு முரணானது என்பதால் அல்-அறபாவின் வெற்றியை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
எனவே, உரிய விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தைப் பெற்றுத்தருமாறு தமது முறைப்பாட்டில் ரைஸ்டார் விளையாட்டுக்கழகம் மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .