Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மே 03 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நா.நவரத்தினராசா
இளைஞர் சேவை மன்றத்தின் கோப் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அணிக்கு 5 பேர் கொண்ட புட்சல் எனும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் இளைஞர் விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
காரைநகர், தெல்லிப்பளை, உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர் கழகங்கள் பங்குபற்றும் இந்தச் சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை (2) மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சாவற்கட்டு மகாத்மா இளைஞர் அணியும் ஏழாலை ஞானமுருகன் இளைஞர் அணியும் மோதின.
முதல்பாதியாட்டத்தில் ஞானமுருகன் அணிக்கு எதிரணியின் வீரர் ஒருவரால் சேம் சைட் கோல் ஒன்று கிடைக்கப்பெற்றது.
இரண்டாவது பாதியாட்டத்தில் மகாத்மா அணி பதில் கோல் அடித்தது. எனினும் அதனை முறியடிக்கும் விதமாக ஞானமுருகள் அணி ஒரு கோலைப் பெற்றது.
ஞானமுருகன் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிக்குள் நுழைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago