2026 மார்ச் 16, திங்கட்கிழமை

அலைபேசி தகராறில் அண்ணன் கொலை

Freelancer   / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் தம்பி அடித்து அண்ணன் உயிரிழந்த சம்பவமொன்று, சாலியவெவ பகுதியில் இன்று (15) இடம்பெற்றுள்ளது.

சாலியவெவ - பலுகஸ்சேகம பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய உதித ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட நபர், தனது சகோதரனான தம்பி மற்றும் நண்பர் ஒருவருடன் அவரது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

இதன்போது, அலைபேசி தொடர்பில் சகோதரர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதமாக ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதில், அண்ணனை தம்பி கட்டையால் அடித்து கொலைசெய்துள்ளார்.AN


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X