Editorial / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி, கப்பலடி கடற்கரைப் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் உரப் பையில் கடலாமையை கடத்திச் செல்ல முற்பட்ட மூவரை, நேற்று (06) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய, கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, கற்பிட்டி, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடலாமை ஒலிவ நிற (Olive Redly) வகையைச் சார்ந்தது என வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இக் கடலாமை, இறைச்சிக்காகப் பயன்படுத்துவதற்காக பிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட கடலாமை காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டமையால் சிகிச்சையளிப்பதற்காக கற்பிட்டி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
3 hours ago