2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

மீலாத் நிகழ்வில் கொழும்பு சேர். ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள்

Freelancer   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் தின கொண்டாட்டங்கள் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கொழும்பு சேர். ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவர் தலைவிகள் நிகழ்வுக்கு பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி. ஹரினி அமரசூரியவை வரவேற்றிருந்ததுடன், பாலர் பிரிவைச் சேர்ந்த மாணவிகள், நிகழ்வின் விருந்தினர்களை வரவேற்கும், வரவேற்பு நடனத்தை முன்னெடுத்திருந்தனர்.

நிகழ்வில் பங்கேற்ற பாடசாலை மாணவிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் ஆகியோர் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரியவுடன் காணப்படுவதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .