R.Tharaniya / 2025 நவம்பர் 05 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை(04) அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முப்பத்தெட்டு கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலை நோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன்படி செவ்வாய்க்கிழமை (04) அன்று கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் படகுகளால் நடத்தப்பட்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது,
கடலோரப் பகுதியில் இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, பதினெட்டு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் முப்பத்தெட்டு கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு டிங்கிகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் மொத்த மதிப்பு எட்டு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



எம்.யூ.எம்.சனூன்
2 minute ago
21 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
21 minute ago
25 minute ago