Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
காயத்திரி விக்கினேஸ்வரன்
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையில், வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் நடத்திய கவிதைப் பயிலரங்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது.
உதவிப் பிரதேச செயலர் நே.செல்வகுமாரி தலைமையில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில், 'கவிதைக்கான அறிமுகம்' என்னும் பொருளில் மூத்த கவிஞர் சோ.பத்மநாதனும், 'தமிழில் மரபுக் கவிதைகள்' என்ற பொருளில் பருத்தித்துறை பிரதேச செயலர் கவிஞர் த.ஜெயசீலனும் கருத்துரை வழங்கினர்.
பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தாக்சாயினி செல்வகுமாரன் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில், 'தமிழில் புதுக்கவிதையும் நவீன கவிதையும்' என்ற பொருளில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் கருத்துரை வழங்கினார்.
இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி மாணவன் ஞா.கட்டைக்கவிதன் (அன்ரனிராஜ்) எழுதிய 'ஊமையின் கனவு' என்ற கவிதை நூலும் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
23 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
7 hours ago