Editorial / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.தபேந்திரன்
தென்மராட்சி பிரதேச கலாசார அதிகார சபையும், கைதடி மேற்கு உதயநகர் அண்ணமார் ஆலய நிர்வாக சபையும் இணைந்து நடத்தும், காத்தவராயன் சிந்து நடைக் கூத்து, அண்ணாவியார் சடையன் சிவஞானம் நெறியாள்கையில், நாளை (21) இரவு 7 மணிக்கு, கைதடி மேற்கு சரஸ்வதி கலை அரங்கில் இடம்பெறவுள்ளது.
தென்மராட்சி பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவர் சின்னத்தம்பி பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அதிதிகளாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் பிராந்திய உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணபிள்ளை கந்தவேள், யாழ் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.கிருஸ்ணகுமார், கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன், ஓய்வுநிலை அதிபர் ப.செல்லத்துரை, தென்மராட்சி பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம அலுவலர் வீ.சிவசுப்பிரமணியம், கைதடி மேற்கு கிராம அலுவலர் கி.சதீசன் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும், இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச கலாசார அதிகார சபையின் உறுப்பினர் செ.சுதாகரன் வரவேற்புரையை நிகழ்த்த, கைதடி மேற்கு உதயநகர் அண்ணமார் ஆலய உப தலைவர் சி.சிவலிங்கம், நன்றியுரை வழங்கவுள்ளார்.
26 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago