Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சிறுவர் உரிமைகள் தொடர்பான குறும்படங்களின் தொகுப்பு மற்றும் பாடல் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு விழா என்பன நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு செங்கலடியில் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுல நாயகி தலைமையில் இடம்பெற்றது.
வாகரைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வேர்ள்ட் விஷன் வாகரைப் பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச இளைஞர் சம்மேளனம் தயாரித்த 'கையெழுத்து', வாகரை ஆரபி கலாமன்றம் தயாரித்த 'துளி' குறும்படம், அன்னை ஆர்ட்ஸ் கிறியேசன்ஸ் தயாரித்த 'பாடம்' ஆகிய குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன், 'இதயம் நினைத்தால்' எனும் சிறுவர் உரிமைகள் பாடல் வெளியீடும் இடம்பெற்றது.
இதேவேளை,சிறுவர் உரிமைகள் தொடர்பான பொதுக் கவனத்தை ஈர்க்கும் வகையில் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் செங்கலடிச் சந்தியிலிருந்து செல்லம் பிறீமியர் படமாளிகை வரை விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.
குறும்பட இறுவெட்டுக்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினிதேவி சார்ள்ஸ் வெளியிட்டு வைத்தார்.
இதில்,வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீகிருஷ்ணராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


44 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago