2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தாகூரின் பிறந்ததினத்தையொட்டி கண்டியில் நாட்டிய நாடகம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்ததினத்தையொட்டி இந்திய கலாசார நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டிய நாடகம் கண்டி கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் மணிப்பூர் பிரதேசத்தை சேர்ந்த நாட்டிய தாரகை பிம்பாவதீதேவி, கதக் நடன வல்லுனர் அஷிம்பந்து பட்டாச்சாரி ஆகியோரின் குழுவினர் இணைந்து இந்த நாட்டிய நாடகத்தை நடத்தினர்.

இந்த நிகழ்வில் பிரதமம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேக்கடுவ, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராசா, மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் என்.பீ.அம்பன்வல கண்டி உதவி  இந்திய உயர்ஸ்தானிகர் ராகேஷ் குமார் மிஸ்ரா, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் உடவத்த நந்த தேரர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X