Janu / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி குளமானது சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய சம்மேளத்தினரால் மூதூர் பிரதேச செயலாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விவசாய சம்மேளனம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் திருகோணமலை கச்சேரியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர் ஆளுநரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், இதனையடுத்து ஆளுநரின் பணிப்புரைக்கமைய திருகோணமலை பிராந்திய நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளரையும் சந்தித்து உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் புதன்கிழமைவரை குறித்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்தாகவும் சம்மேளன உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.


15 minute ago
41 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
42 minute ago
53 minute ago