2025 ஜூலை 09, புதன்கிழமை

கந்தளாயில் ஒன்பது பேருக்கு கொரோனா

Editorial   / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கந்தளாயில் வங்கி ஊழியர்கள் உட்பட ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதைவேளை அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை  சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த உள்ளதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கந்தளாய்-பேராசை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு குரோம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

 

மேலும், முகக் கவசங்கள் அணியாதவர்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணியகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுமாறும், முகக் கவசங்களை அணியுமாறும் சுகாதார திணைக்களம் பிடிக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .