2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Janu   / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்குடா - பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது  காணாமல் போனவர் தீவிர தேடுதல்  நடவடிக்கைகளுக்கு  பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக திங்கட்கிழமை  (29) மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவொன்று  பாசிக்குடா கடலில் ஞாயிற்றுக்கிழமை (28)   குளித்துக் கொண்டிருந்த போதே அவர் காணாமல் போயுள்ளார் .

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .