Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணியில் நேற்று முன்தினம்(16) தனியார் ஒருவருக்குச் சொந்தமான பத்தரகாளியம்மன் கோயில் வளாகத்தில் SFG - 87 ரக கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட இருந்த தீப் பள்ளயத்துக்குக் குழி ஒன்றை வெட்டும் போது அக்குழியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் காணி உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்தமையை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் அக் கைக் குண்டை மீட்டுள்ளதோடு அதனை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று - செயலிழக்கும் விசேட பொலிஸ் அதிரடி படையின் உதவியை நாடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago