Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக, அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்னும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று
வருகின்றன.
அந்தவகையில் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரசடித்தீவு வடக்கு கிராமத்திற்கான, குடிநீர் இணைப்பினை வழங்கும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் (15)இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பின்தங்கிய கிராமிய பெருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் சுத்தமான குடிநீர்
வசதியினைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago