2025 ஜூலை 09, புதன்கிழமை

சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்

R.Tharaniya   / 2025 ஜூலை 08 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் கிழக்கு - சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை  (7) அன்று  மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மூதூர்கிழக்கு - சம்பூரில் 1990ஆம் ஆண்டு ஜூலைமாதம் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57 பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் அப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமானஅஞ்சலி நிகழ்வும் இதன் போது நடைபெற்றது.

படுகொலைசெய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்குமலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டகுடும்பங்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,பெண் உரிமை பாதுகாவலர்கள், சிவில்அமைப்புகள், பிரதேச அரசியல்வாதிகள் உட்படபலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்த கொடூரமான படுகொலை சம்பவத்தின் போது சீருடை அணிந்த, ஆயுதம் தாங்கிய படைகள்,பிற்பகல் 2 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர்.

பின்னர்,அவர்களை ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும்,பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால்,காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள்வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர்.

எனவும் இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், மூதூர் கிழக்கு - சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கவலையுடன் கண்ணீர் வடித்தனர்.

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகின்ற நிலையிலும், நாட்டின் எந்தவொரு அரசும் இதுவரை உரியநீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாளில், தற்போதைய அரசு, மூதூர் கிழக்கு சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த யுத்த காலத்தில் மூதூர் கிழக்கு - சம்பூர்கிராமத்தில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள்,பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

அ . அச்சுதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .