Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் சம்மாந்துறை நிந்தவூர்,பாலமுனை,அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது நேற்றுமுன்தினம் (25) திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது,பொருட்களினைப் பதுக்கி வைப்பது தொடர்பான முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதையடுத்து அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ண தலைமையிலான குழுவினரால் குறித்த சுற்றிவளைப்பானது முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது சில வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இவ் அதிகார சபையின் மாவட்டப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago