2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நீங்கள் வராவிட்டால் நாங்கள் வருவோம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான் 

நாட்டில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள் தங்களுக்கான தடுப்பூசிகளைத் தடுப்பூசி வழங்கும் பாடசாலைகளில் பெற்றுக் கொள்ளும்படி ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள்  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். 

அத்துடன் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத  நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசிகளைச்  செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .