Freelancer / 2023 நவம்பர் 07 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தற்போது அதிக மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றதால் மாகாணத்திலுள்ள நீர் நிலைகளின் நீர்வரத்து உயர்ந்து வருகின்றது.
எனவே, பொது மக்கள் நீரேந்து பிரதேசங்களில் மிக அவதானமாக முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு, வேண்டத்தகாத உயிரிழப்புகள் மற்றும் ஏனைய அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறவேண்டும் என அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாணத்திற்கு வெளி மாகாணங்களிலிருந்து வருகை தருபவர்கள் மேற்படி நீரேந்து பகுதிகளில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மாகாணத்திலுள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கிணறுகள் மற்றும் குட்டைகள் என்பவற்றின் நீர்வரத்து உயர்ந்து வருகின்றது. நீராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிழக்கில் கடந்த காலங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
16 minute ago
1 hours ago