2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

படகு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சஜித் நிதி உதவி

Ilango Bharathy   / 2022 ஜனவரி 05 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை   விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (04) நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.

வடக்கு,கிழக்கில் ''பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம், “ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூச்சு’ நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் முகமாக  சஜித்  வருகை தந்தபோதே,  திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இதன் போது  படகு விபத்து இடம் பெற்ற படகு பாதைப் பகுதியினையும் சஜித் பிரேமதாச பார்வையிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .