Editorial / 2025 ஜனவரி 16 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியிலுள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றின் உள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector) ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிணவாடை வந்ததை அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ஸ்தல தலத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் சொகோ தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago