2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 31 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

சுவிட்ஸர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு  அறப்பணி  மையத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 21 வது வீடு இன்று (31) திருகோணமலையில்   திறந்து வைக்கப்பட்டது.

இவ்வீட்டினை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர்  பொன்னம்பலம் தனேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வு அறப்பணி மையத்தின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் சரவணபவானந்தம் திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

கணவனை இழந்த நிலையில் மூன்று பிள்ளைகளுடன் நிர்க்கதியான நிலையிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வீடானது ஆதிபராசக்தி அறப்பணி மையத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது வீடு என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .