2025 ஜூலை 09, புதன்கிழமை

மட்டக்களப்பில் கொரோனாவுக்கு இருவர் மரணம்

Editorial   / 2021 மே 07 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ஆண்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை (7) உயிரிழந்துள்ளனர். அதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில், மூன்றாவது கொரோனா அலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார் 

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாவற்குடா பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்,? நேற்று முன்தினம் புதன்கிழமை  உயிரிழந்தார்.

களுவாஞ்சிக்குடியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதிவிபத்தில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 

கொரோனா  தொற்றின் மூன்றாவது அலை, ஏப்பிரல் 22 ஆம் திகதி ஆரம்பித்தது. மாவட்டத்தில் இதுவரையிலும் நால்வர் மரணித்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து,  இதுவரையிலும் 13 பேர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .