Janu / 2026 ஜனவரி 05 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட புதிய மேலதிக அரசாங்க அதிபராக (காணி) ஜெயகௌரி ஸ்ரீபதி திங்கட்கிழமை (05) அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக விசேட மத அனுஷ்டானங்களுடன் கடமையை பொறுப்பேற்றார். அவர் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றவுள்ளார்
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார ,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
2014ல் இருந்து 2025 வரையான காலப் பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஜெ.ஸ்ரீபதி இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தை சேர்ந்தவராவார்.
இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏ.எச் ஹஸ்பர்

50 minute ago
3 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
19 Apr 2026