Janu / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும்போக வேளாண்மை அறுவடை காலத்தை முன்னிட்டு, யானைகளின் அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றில் மின் குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னானின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிரின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய வட்டாரப் பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இரவு நேரங்களில் யானைகள் நுழைவு அதிகரிக்கும் பகுதிகளாகக் கருதப்படும் பகுதியில் ஒளியமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இயங்கும் வகையில், இரவு நேர பார்வை தெளிவை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இவ் வேலைத்திட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக் அஹமட் மற்றும் பெளமி சுலைமான் ஆகியோரும் கலந்து கொண்டு பணிகளை பார்வையிட்டனர். யானை அச்சுறுத்தலைக் குறைக்கும் நோக்கில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நூருல் ஹுதா உமர்


6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026