Ilango Bharathy / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
கொக்கட்டிச்சோலை விவசாய திணைக்கள காரியாலயத்தின் களஞ்சிய அறையில் இருந்த சுமார் 250 கிலோகிராம் நிறையுள்ள 5 உரப்பைகள் நேற்றுமுன்தினம் (14) இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவதினத்தன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலரே இவ்வாறு களஞ்சியசாலையின் பூட்டு உடைத்து அங்கிருந்த உரப்பைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச் சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சிலதினங்களுக்கு முன்னர் பிரபல வர்த்தகர் ஒருவர்ஆயித்தியமலை குறிஞ்சாமுனை வயல்பகுதி வாடி ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த சுமார் 50 உரப்பைகளை அங்கு சென்ற கொள்ளையர்கள் காவலாளியின் கைகளைக் கட்டிவிட்டு கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .
55 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
4 hours ago