2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ் முஸ்லிம்களுக்கு உதவுவதில் டக்ளஸ் தேவானந்தா முன்னணியில்-பள்ளிவாசல் தலைவர்

Super User   / 2010 ஏப்ரல் 04 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டதிலிருந்து இன்றுவரை தமக்காக குரல் கொடுத்துவருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என யாழ் பெரிய முஹிதீன் பள்ளிவாசல் தலைவர் சரப் தெரிவித்துள்ளார்.

யாழ் பெரிய முஸ்லிம் பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

1990ஆம் ஆண்டு தாம் யாழ் குடாநாட்டிலிருந்து வெளியேறியது முதல் இன்றுவரை புத்தளத்தில் தாம் அகதி வாழ்வை வாழ்ந்து வருவதாகவும் சரப் குறிப்பிட்டார்.

எனவே, தமது வாக்குகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அளிப்பதே சிறந்தது எனவும் சரப் தெரிவித்தார்.

இதேவேளை, இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவுவதாக உறுதியளித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .