2021 ஜூன் 16, புதன்கிழமை

அம்பாறையில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா வெற்றி

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா வெற்றி பெற்றுள்ளார்.

அம்பாறையிலிருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் இத்தகவலை  தமிழ்மிரர் இணையதளத்துக்கு  ஊர்ஜிதப்படுத்தின.

இன்று மாலைவரை அம்பாறை மாவட்டத்தில் ஆளும்கட்சியின் சார்பில்  தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு வேட்பாளராக பேரியல் அஷ்ரபின் பெயர் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், மாலையில் வாக்குகள் எண்ணும் பணிகள் பூர்த்தியடைந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நான்கு ஆசனங்கள் கிடைத்திருந்தன.

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா 36,643 வாக்குகளைப்பெற்று இரண்டாவது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் சார்பில் முதலாவது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ரியர்  அட்மிரல் சரத் வீரசேகர 54,373 வாக்குகளைப்பெற்றுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .