2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இனிமேல் அரச வேலைவாய்ப்பு இல்லை

Simrith   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் அரச சேவையின் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவோர் அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

' நாட்டில் 15 .லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும். மக்கள் தொகையில் 12 பேருக்கு ஓர் அரசு ஊழியர் உள்ளார்.
இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். அரசுக்கு இது பாரிய சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை செய்ய முடியாது' என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .